Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார் வீட்டுக்கு வாங்க… “3 நாட்களாக மகனின் சடலத்துடன் வசித்த தாய்”… அதிர்ச்சியடைந்த போலீசார்..!!

இறந்து போன மகனின் உடலை, தாய் 3 நாட்களாக வீட்டுக்குள் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருநின்றவூர் சிடிஎச் சாலையில் வசித்து வரும் ரேவதி என்ற பெண்மணி தனது கணவர் ஜீவானந்தம் என்பவரிடமிருந்து பிரிந்த பின்னர் 7 வயதுடைய மகன் சாமுவேலுடன் தனியாக வசித்துவந்துள்ளார். இந்த சூழலில் நேற்று கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாதன் காரணமாக பசி, பட்டினியில் தன்னுடைய மகன் இறந்துவிட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்..

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநின்றவூர் போலீசார், சரஸ்வதி வீட்டுக்கு சென்று சோதனைமேற்கொண்டனர். இந்த சோதனையில் 7 வயது சிறுவன் உடல் அழுகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. அதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயிடம் விசாரணை நடத்தியதில், 3 நாட்களுக்கும் மேலாக அவரது தாய் சிறுவனின் சடலத்துடன் வசித்து வந்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் விசாரணையில் தெரியவந்தது.

உண்மையில் சிறுவன் பசி கொடுமையால் தான் உயிரிழந்தானா? அல்லது தாய் கொலை செய்து விட்டு நாடகமாடுகிறாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் சிறுவனின் தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது.

Categories

Tech |