5 கணவன்களை உதறிவிட்டு 6ஆவது கணவருடன் பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரூ மாவட்டத்தில் இருக்கும் கச்சினஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சந்துரு.. இவருக்கு வயது 22 ஆகிறது.. இவர் 38 வயது பெண் ஒருவருடன் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, நானும், இந்த பெண்ணும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டுள்ளோம்.. எங்களது கல்யாணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. அதுமட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுப்பதால், எங்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறி புகார் அளித்திருந்தனர்..
இதையடுத்து சந்துரு அழைத்து வந்த பெண்ணை தேடி ஸ்டேஷனுக்கு திடீரென 5 ஆண்கள் தேடி வந்து, அவர்கள் அனைவரும், அந்த பெண் என்னுடைய மனைவி என்றும், என்னுடன் அனுப்பு வையுங்கள் என்றும் சொல்லியுள்ளனர்..
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த, போலீசார் அந்த பெண் பற்றி விசாரணை நடத்தினர்.. அப்போது அப்பெண்ணின் பெயர் பிரியா என்பதும், அவர் ஏற்கனவே 5 பேரை கல்யாணம் செய்தவர் என்பதும், அவர்களுடன் 2 குழந்தைகளும் பிறந்திருப்பதும் தெரியவந்துள்ளது.. ஆனால் அந்த பெண்ணோ இப்போது, நான் சந்துருவை காதலிக்கிறேன்.. நான் சந்துருவுடன் குடும்பம் நடத்தவே விரும்புகிறேன் என போலீசாரிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதனால் போலீசார் சந்திருவிடம், நீ சின்னப் பையன் உனக்கு இந்த விவகாரம் வேண்டாம், விலகி சென்று விடு என்று சொல்ல, அவனோ போலீசாரின் பேச்சை சிறிதும் பொருட்படுத்தாமல், எனக்கு அந்த பெண் தான் வேண்டும் என்றும் ,எத்தனை கல்யாணம் நடந்து முடிந்திருந்தாலும் பரவியில்லை அவர் தான் வேண்டும் என்றுசொல்ல, போலீசார் சந்துருவின் அக்காவை அழைத்து விஷயத்தை விளக்கி கூறியுள்ளனர்.
ஏன் அக்காவிடம் சொன்னார்கள் என்றால், சந்துருவுக்கு அம்மா, அப்பா கிடையாது. என்பதால், அக்காவிற்கு போன் செய்து சொல்லியுள்ளனர்.. அவர் ஸ்டேஷனுக்கு வந்து எவ்வளவோ சொல்லியும் தம்பி சந்துரு கேட்கவில்லை.. வேறு வழியின்றி போலீசார், அந்தப்பெண் மீது ஏற்கனவே 5 பேரை கல்யாணம் செய்துவிட்டு விவாகரத்து வாங்காமல் 6 ஆவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை பார்க்கும்போது மருதமலை படத்தில் போலீசாக இருக்கும் வடிவேலுவிடம் திருமணம் செய்து வைக்கும்படி இருவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதும், பின் அடுத்தடுத்து வரிசையாக கணவர் என்று சொல்லிக்கொண்டு சிலர் வருவதையும், நியாபகப்படுத்துகிறது..