Categories
உலக செய்திகள்

அயர்ந்து தூங்கிய பெண்… “வாயில் நுழைந்த உயிரினம்”… வெளியே எடுக்கும்போது கத்திய மருத்துவர்கள்..!!

ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் வயிற்றுக்குள் இருந்த ஒன்றை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் அயர்ந்து தூங்கி எழுந்த பின் வயிற்றுக்குள் ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்துள்ளார்.. இதனையடுத்து உடனே அந்தப்பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.. அங்கு பரிசோதனை செய்ததில் அவரது வயிற்றுக்குள் ஏதோ நுழைந்திருக்கிறது என்பதை மட்டும் உறுதி செய்துவிட்ட பின் மருத்துவர்கள் வாய் வழியாக எண்டோஸ்கோப் என்னும் கருவியை வயிற்றுக்குள் செலுத்தி அந்த பொருளை வெளியே எடுத்திருக்கின்றனர்.

அப்போது ஏதோ மிகவும் நீளமாக வர, முதலில் அது என்னவென்று கவனிக்காத பெண் மருத்துவர் ஒருவர், அது ஒரு 4 அடி நீளமுடைய பாம்பு என்பதை உணர்ந்ததும், பதறி பின்வாங்குவதை வெளியாகியிருக்கும் வீடியோவில் நாம் காணலாம்..அந்த அறையில் இருந்த செவிலியர்கள் உட்பட மற்ற மருத்துவ ஊழியர்களும் பாம்பைக் கண்டதும் அச்சத்தில் அலறியுள்ளனர்..

ரஷ்யாவில் இருக்கும் லெவாஷி (Levashi) என்ற கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதற்கிடையே, இளைஞர்களை வீட்டுக்கு வெளியே படுத்து உறங்கவேண்டாம், பாம்பு ஏதாவது வாய்க்குள் நுழைந்து விடும் என்றே அந்த கிராமத்து முதியவர்கள் அடிக்கடி எச்சரித்து வருவது வழக்கமாம்.. இந்த இளம்பெண்ணின் வாயில் புகுந்து அது தற்போது நிஜமாகிவிட்டது

 

Categories

Tech |