Categories
தேசிய செய்திகள்

எல்லாம் ஓவர்….. பணம் கட்டிதான் ஆகணும்…. மக்களுக்கு பரபரப்பு அறிவிப்பு….!!

ரிசர்வ் வங்கி அறிவித்த ஆறுமாத கடன் தவணை இன்றுடன் முடிவடைவதாக அறிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால், குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர்.

எனவே வங்கிகளில் வாங்கிய கடன் மற்றும் பொருட்கள் மீதான கட்டணங்கள் உள்ளிட்டவற்றை வசூலிக்க கூடாது எனவும், அனைத்திற்கும் கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி அறிவித்த ஆறுமாத கடன் தவணை இன்றுடன் முடிவடைவதால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

செப்டம்பர் முதல் வாரத்தில் அனைவரும் EMI, வங்கியில் வாங்கிய லோனுக்கான கட்டணங்கள் உட்பட அனைத்து தொகைகளையும் கட்ட வேண்டியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மக்கள் தவணையை நீட்டிக்க கோரிக்கை வைத்த போதிலும், வங்கிகள் கடன் தவணையை மேலும் நீட்டிக்க கூடாது என ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டுள்ளனர். 

Categories

Tech |