2020-21 ஆம் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி சதவீதம் சரிந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கினால், இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டதாக சமீபத்தில் மத்திய அரசு சார்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால்,
அதற்கு முன்பே இந்திய பொருளாதாரம் சரிந்து விட்டது என காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் கூறியதை உண்மை என நிரூபிக்கும் வகையில், தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியாவில் 2020-2021 முதல் காலாண்டிற்க்கான ஜிடிபி வளர்ச்சி 23.9 சதவீதம் சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான சரிவு ஆகும். இந்த காலாண்டில் விவசாயத்துறை மட்டுமே 3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கட்டுமானத்துறை 50 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் மோடி கூறிய 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை அடைய முடியுமா? என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஜிடிபி வளர்ச்சி சரிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.