பிரிட்டனில் பட்டப்பகலில் 5 வயது மகன் கண்முன்னாலேயே தாய் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் மான்செஸ்டர்ன் (Manchester) Withington என்ற இடத்தில் இருக்கும் Rudheath குடியிருப்பு வீதியில் கடந்த 29-ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மதியம் 1 :30 மணியளவில், 5 வயது மகனுடன் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்..
அப்போது அடையாளர் தெரியாத நபர் ஒருவர் திடீரென அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பான போட்டோக்கள் மற்றும் சிசிடிவி வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டு அந்த நபரை கண்டுபிடிப்பதற்காக மக்களின் உதவியை நாடியிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பான கொலை முயற்சி என்ற சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவனை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கிரேட்டர் மான்செஸ்டர் (Greater Manchester) காவல்துறையின் மான்செஸ்டர் மாவட்டத்தைச் சேர்ந்த DI John Robb கூறுகையில், இந்த தாக்குதல் கொடூரமானது.. இதில் பெண் ஒருவர் தனது மகன் கண்முன்னால் தாக்கப்பட்டுள்ளார்.
இது தனிப்பட்ட முறையில் நடந்த ஒரு தாக்குதல் என்று நம்பப்படுவதாகவும், இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக நாங்கள் வேறு யாரையும் தற்போது தேடவில்லை என்று மக்களுக்கு உறுதியளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஒருவரை கைது செய்து இருக்கிறோம் என்றாலும், இந்த தாக்குதலின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது பற்றிய முழு விசாரணையில் இறங்கியிருக்கிறோம்.. அதிகாரிகளின் விசாரணைகளுக்கு உதவும் விதமாக ஏதேனும் உங்களிடம் தகவல் இருந்தால், தயவுசெய்து போலீசாரை தொடர்பு கொண்டு சொல்லும்படி கூறியுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தில் சிறுவனின் தாயாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் நல்ல நிலையிலேயே இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.. இருப்பினும் அச்சிறுவன், அந்தப்பெண்னை ஏன் தாக்கினார்? என்ன காரணம் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை, அடுத்தடுது நடத்தப்படும் விசாரணைக்கு பின்னரே இந்த சம்பவம் குறித்த முழுமையான தகவல் தெரியவரும்.. இருப்பினும் நாட்டில் பட்டப்பகலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.