மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு அரசியல் தலைவர்கள், அரசியல் வட்டாரங்களில் இருப்பவர்களை தாண்டி பொது மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள், அவர் செய்த சாதனைகள், அவரது வாழ்க்கை நினைவுகள் உள்ளிட்டவற்றை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பிரணாப் முகர்ஜி 1960களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன்பின்,
தனது அரசியல் செயல் திறனால் கட்சியில் படிப்படியாக இவர் முன்னுக்கு வந்தார். 1980-களில் இந்திராகாந்தி மறைவுக்குப்பின் ராஜீவ் காந்தியால் சற்றே பிரணாப் முகர்ஜி ஓரங்கட்ட பட்டாலும், 1990களுக்கு மேல் கட்சியில் மீண்டும் செல்வாக்கு பெற்றார். நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் அமைச்சரவையில் நம்பர் 2 ஆக இருந்தார். பல்வேறு அரசியல் சர்ச்சைகளில் பங்கேற்றும், பார்த்தும் வந்துள்ள பிரணாப் முகர்ஜி தினசரி தவறாமல் டைரி எழுதும் பழக்கம் உள்ளவராம்.
டைரி எழுதாமல் அன்றைய நாளை அவர் கடந்து செல்லவே மாட்டாராம். இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வலம் வர, நெட்டிசன்கள் சிலர், ஒருவேளை பிரணாப் முகர்ஜியின் டைரி வெளிச்சத்திற்கு வந்தால், என்ன நடக்கும் ? என்னென்ன ரகசியங்கள் உண்டோ ? வெளிப்படுமோ ? என்பது உள்ளிட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.