Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரகசியம் பகிர்ந்த பெண்… அந்தரங்க படங்களை வைத்து மிரட்டி சீரழித்த நபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

பெண்ணின் அந்தரங்க படங்களை வைத்துக் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த நபரை குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் திவ்யா.. 32 வயதான திவ்யா தனது கணவர் மற்றும் மகன் (8), மகள்(3) ஆகியோருடன் வசித்து வந்தார்.. இந்நிலையில் திவ்யா தன்னுடைய கணவருடன் சேர்ந்து தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றும் நடத்தி வந்துள்ளார்.. அதில் ரத்தினக்குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்..இதனால் திவ்யா தனது குடும்பத்தில் ஏற்பட்ட சின்ன சின்ன பிரச்சனைகளை, நண்பராக நினைத்து ரத்தினகுமாரிடம் பகிர்ந்து வந்துள்ளார்.

நாளடைவில் திவ்யா திருமணத்திற்கு முன்னதாக வினய் கல்யாண் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் பற்றியும் கூறியுள்ளார்.. இதனை வைத்து ரத்தினகுமார் திவ்யாவை தொடர்ந்து மிரட்டத் தொடங்கியுள்ளார். மேலும் தான் சொல்வதை நீ கேட்டு நடந்து கொண்டால் இந்த ரகசியம் வெளியில் யாரிடமும் செல்லாது என மிரட்டி, வாட்ஸ் அப் மூலம் அந்தபெண்ணின் அந்தரங்க படங்களையும், வீடியோ கால் செய்ய வைத்து அதையும் பதிவு செய்து வைத்துக்கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஆபாச படங்களை இணையத்தில் பதிவு செய்து விடுவதாக மிரட்டி திவ்யாவிடம் தன்னுடைய பாலியல் ஆசையை தீர்த்து வந்துள்ளார்.. ஒவ்வொரு முறையும் அதனையும் வீடியோ எடுத்து பதிவு செய்து வைத்துக் கொண்டுள்ளார்.

இதனிடையே திவ்யாவின் முன்னாள் காதலனான வினய் கல்யாண் உடன் இணைந்து கொண்டு தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட திவ்யா கணவரிடம் நடந்ததை எல்லாம் எடுத்துக் கூறி, அவருடன் சேர்ந்து வில்லிவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார்.

அந்த புகாரில் திவ்யா, “ரத்தினக்குமாரின் இ – மெயிலில் தன்னுடைய 1000க்கும் மேற்பட்ட அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன.. அதனை ரத்தினகுமார் பல நபர்களுக்கு அனுப்பியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதேபோன்று அதே காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலும் 3 பெண் ஊழியர்களுக்கும் ரத்தினக்குமார் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இந்த புகாரை வைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து ரத்தினகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |