Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரணாப்புக்கு ஏன் பிரதமர் பதவி வழங்கப்படவில்லை?

கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பிரணாப்பை தவிர்த்துவிட்டு மன்மோகன் சிங்கை சோனியா காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்ற கேள்வி அனைவரிடமும் எழுகிறது. இதனால், அரசியல் வட்டாரத்தில் குழுப்பமும் நிலவியது.

பாஜகவை தோற்கடித்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. யாரும் எதிர்பாராத விதமாக மன்மோகன் சிங்கை பிரதமராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுத்தார்.

“இது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக, பிரணாப் முகர்ஜிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு புத்தக வெளியிட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.

‘டெல்லியில் கூட்டணி ஆட்சி காலம் 1998-12’ என்ற புத்தகத்தை பிரணாப் முகர்ஜி எழுதியிருந்தார். அந்த புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட மன்மோகன் சிங், “கட்சியின் மூத்த தலைவரான பிரணாப்பை தவிர்த்து விட்டு என்னை பிரதமராக தேர்ந்தெடுத்தபோது, பிரணாப் வருத்தமாக இருந்தார். அவரின் வருத்தும் சரியானதே. அவர் விருப்பப்பட்டு அரசியலுக்கு வந்தார். ஆனால், நான் எதிர்பாராத விதமாக அரசியலில் நுழைந்தேன். பிரதமராவதற்கு என்னை விட அவரே தகுதி வாய்ந்தவர். எனக்கு அச்சூழலில் வேறு வழி இல்லை என்பது அவருக்கு தெரியும்.

அவர் வருத்தப்பட்டதற்கு காரணம் உண்டு. ஆனால், என் மீது அவர் மரியாதை வைத்திருந்தார். எங்கள் இருவருக்கும் இடையேயான உறவே நாங்கள் வாழும் வரை தொடரும்” எனத் தெரிவித்திருந்தார்.

“இந்தியில் புலமை இல்லாதது, மாநிலங்களவையில் நீண்ட காலமாக உறுப்பினராக இருந்த காரணத்தால் எனக்கு பிரதமர் பதவி அளிக்கப்படவில்லை” என பிரணாப் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

பிரணாப்புக்கு ஏன் பிரதமர் பதவி வழங்கப்படவில்லை?

கடந்த 1984ஆம் ஆண்டு, அக்டோபர் மாத இறுதியில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, பிரணாப் முகர்ஜி, ராஜீவ் காந்தி ஆகியோர் மேற்குவங்கத்தில் இருந்தனர். இதுகுறித்து பிரணாப் தான் எழுதிய ‘குழப்பமான காலகட்டம்: 1980-1996’ என்ற புத்தகத்தில், “எனது கண்களிலிருந்து கண்ணீர் ஆர்ப்பறித்து வடிந்தது. நான் துடைத்து கொண்டே இருந்தேன். சிறிது நேரம் பிறகே நான் தெளிவானேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்திரா காந்தி வழிகாட்டலால் தான் அரசியலின் உச்சிக்கு பிரணாப் சென்றிருந்தார்.

‘அனைத்து சூழலுக்கும் பக்குவமானவர் பிரணாப்’ என இந்திரா காந்தி அடிக்கடி கூறுவார். காரணிமின்றி இதனை அவர் கூறவில்லை. 1978ஆம் ஆண்டு காங்கிரஸ் பிரிந்தபோது, இந்திரா காந்தியின் பக்கமே பிரணாப் நின்றார்.

தனது தந்தையின் அறிவுரைப்படியே தான் செயல்பட்டதாக பிரணாப் கூறினார். “என்னை நினைத்து வெட்கப்படும் அளவுக்கு நீ செயல்படமாட்டாய் என நம்புகிறேன். இக்கட்டான சூழ்நிலையில், ஒருவருக்கு ஆதரவாக இருந்தால் தான், மனித நேயம் வெளிப்படும்” என பிரணாப்பின் தந்தை அவரிடம் கூறியிருந்தார். எனவேதான், இந்திரா காந்தி மீது தான் வைத்த விசுவாசத்தை திரும்பபெறவில்லை என பிரணாப் தெரிவித்திருந்தார். அவசர கால பிரகடனத்தின்போது கூட இந்திரா காந்திக்கு பக்கபலமாகப பிரணாப் இருந்தார். அதற்கான விமர்சனங்களை பகிர்ந்து கொண்டார்.

1964ஆம் ஆண்டு நேரு இறந்த பிறகு, லால் பகதூர் சாஸ்திரி எப்படி பிரதமராக்கப்பட்டாரோ, அதேபோல் இந்திரா படுகொலை செய்யப்பட்ட பிறகும் அவரது இடத்தை முகர்ஜி நிரப்புவார் என்றே பலரும் நினைத்தனர். குடியரசுத் தலைவர் ஜெயில் சிங், நிதியமைச்சர் பிரணாப்பை அழைத்து இடைக்கால பிரதமராக தொடர அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

இதுகுறித்து பிரணாப் தனது புத்தகத்தில், “அதற்கு முன்பு வரை, பிரதமரின் மரணம் இயற்கையாக அமைந்தது. ஆனால், அப்போது, பிரதமர் படுகொலை செய்யப்படுகிறார். இம்மாதிரியான சூழலில், அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து பல வதந்திகள் பரப்பப்பட்டன.

எனவே, மேற்கு வங்கத்திலிருந்து டெல்லிக்கு திரும்பி கொண்டிருந்த நானும் மற்ற காங்கிரஸ் பிரமுகர்களும் ராஜிவ் காந்தியை பிரதமராக முன்மொழியலாம் என முடிவு எடுத்தோம். ஆனால், அதற்கு முன்பே, பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் வசந்த் சதி, ராஜீவ் காந்திக்கு ஆதரவாக களமிறங்கி ஆதரவு திரட்ட தொடங்கிவிட்டார்

சில மாதங்கள் கழித்து, 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மக்களவைத் தேர்தலில் 414 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், அமைச்சரவையில் என் பெயர் இடம்பெறவில்லை.

இது எனக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. என்னால் அதனை நம்பமுடியவில்லை. இருப்பினும், என்னை நானே அமைதி படுத்திக் கொண்டு, தொலைக்காட்சியில் பிரதமர் பதவியேற்பு விழாவை கண்டு ரசித்தேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

1986ஆம் ஆண்டு, ராஷ்டிரிய சமாஜ்வாதி காங்கிரஸ் என்ற கட்சியை பிரணாப் தொடங்கினார். மூன்றே ஆண்டுகளில், ராஜிவ் காந்தியுடன் ஏற்பட்ட மனக் கசப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தனது சொந்த கட்சியை பிரணாப் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.

1991ஆம் ஆண்டு, ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக பதவியேற்றார். பின்னர், திட்டக்குழுவின் தலைவராக பிரணாப்பை அவர் நியமித்தார். 1995ஆம் ஆண்டு, அவர் வெளியுறவுத்துறை அமைச்சரரானார்.

ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரின் மனைவியான சோனியா காந்தியை பிரதமாக தேர்ந்தெடுக்க பலர் முயற்சித்தனர். ஆனால், அதனை அவர் ஏற்க மறுத்தார். அரசியலில் சேர மறுத்த சோனியா, 1997ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து, 1998ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியாவை கட்சியின் தலைவராக்குவதில் பிரணாப் பெரும் பங்காற்றினார்.

சோனியாவுக்கு அரசியலை கற்று தந்தவரே பிரணாப் தான் எனக் கூறப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலையை எப்படி அணுகுவது என சோனியாவுக்கு பிரணாப் கற்றுக் கொடுத்துள்ளார்.

2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, பிரதமர் பதவியை சோனியா ஏற்பார் என பேசப்பட்டுவந்தது. ஆனால், வெளிநாட்டவரான அவர் பிரதமர் பதவியை ஏற்கக் கூடாது என பலர் விமர்சித்தனர். இதையடுத்து, பிரதமர் பதவி பிரணாப்புக்கு அளிக்கப்படலாம் என தகவல் வெளியானது. இதையேதான், அவரும் எதிர்பார்த்தார். “அரசு நிர்வாகத்தின் எனது அனுபவத்தை கருத்தில் கொண்டு பிரதமர் பதவி எனக்கு அளிக்கப்படும் என எதிர்பார்ப்புகள் இருந்தன” என பிரணாப் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |