Categories
உலக செய்திகள்

வாய் வழியாக உள் நுழைந்த உயிரினம்… ஆழ்ந்து உறங்கிய இளம்பெண்… அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!!

ஆழ்ந்து உறங்கிய பெண்ணின் வாய் வழியாக நுழைந்த உயிரினத்தினை மருத்துவர்கள் பயத்துடன் மீட்டெடுத்தனர்.

ரஷ்யாவில் லவாசி  என்ற கிராமத்தில் ஒரு இளம்பெண் ஆழ்ந்த  உறங்கியுள்ளார். அச்சமயத்தில் அவரது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போன்ற அசைவுகளை அவர் உணர்ந்துள்ளார். இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தனது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதை உணர்வதாக மருத்துவர்களிடம் கூறிய நிலையில், அவர்கள் எண்டோஸ்கோப் எனும் கருவியை பயன்படுத்தி வயிற்றுக்குள் சென்ற பொருளை வெளியே எடுத்தனர். 

எண்டோஸ்கோப் உதவியின் மூலம் நீளமாக வெளிவந்தது என்னவென்று அந்த மருத்துவராலும் முதலில் கண்டறிய முடியவில்லை. எனினும் சிறிது நேரத்திற்கு பிறகு நீளமாக வெளி வர வர அது நான்கு அடி நீளமுள்ள பாம்பு என்பதை உணர்ந்து பயத்தில் பின் வாங்கி உள்ளார். மருத்துவரோடு மட்டுமல்லாமல் அங்கு பணியாற்றிய செவிலியர்களும் பாம்பை கண்டதும் பயத்தில் அலறி அடித்தனர் என்பது   குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |