இன்று முதல் சுங்க சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கி உள்ளது. இந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து சேவை, இ – பாஸ் சேவை போன்ற முக்கிய தடைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டண உயர்வு இருக்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் 20 சுங்கச்சாவடிகளில் மட்டும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, சேலம் மாவட்டத்தில் ஒமலூர், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வைகுந்தம், மற்றும் திருச்சி மாவட்டத்தில், சமயபுரம், பொன்னம்பலப்பட்டி, திருப்பராய்த்துறையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகள் மட்டுமல்லாமல் புதூர் பாண்டியபுரம், எலியார்பதி, கொடைரோடு, வேலஞ்செட்டியூர் போன்ற சுங்கச்சாவடிகளிலும் புதிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களின் தரத்திற்கு ஏற்றவாறு 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.