Categories
மாநில செய்திகள்

பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு… போலீசார் அதிரடி…!!

பாஜக மாநில தலைவர் எல்முருகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மூன்றாம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தடைகளை விதித்திருந்தது.  அந்த விதிமுறைகளை மீறி வாகனங்களில் செல்பவர்கள் மீதும் கூட்டமாக பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதாவது, பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று வழிநடத்திய எல்.முருகன் உள்ளிட்ட 250 பேர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பதிவிற்கும் முன்,
தியாகதுருகத்தில் எல்.முருகனுக்கு அலுவலக திறப்பு விழாவில்  வரவேற்பும், கள்ளக்குறிச்சியில் பாஜக அலுவலக திறப்பும் நடந்தது. அரசால் போடப்பட்டுள்ள
144 தடை உத்தரவை மீறி 100க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியது போன்ற அத்துமீறல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |