செப்டம்பர் 4 ஆம் தேதி அந்தமான் கடலில் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளின் ராணுவமும் பல்வேறு கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் கவ்காஷ் 2020 என்ற கூட்டு ராணுவ பயிற்சியில், ரஷ்யா மற்றும் வேறு ஒரு நாட்டுடன் இணைந்து இந்தியா செப்டம்பர் மாதம் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் கொரோனா வைரஸின் காரணமாக இந்த பயிற்சியை இந்திய ராணுவத் துறை தவிர்க்கலாம் என்று அறிவித்திருந்தது. இதேபோலவே மேலும் சில சர்வதேச கூட்டு பயிற்சிகளையும் இந்திய ராணுவம் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தவிர்த்தது.
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான எல்லை விவகாரத்தில் மோதல் போக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் கூட்டு பயிற்சியில் இருந்து விலகுவதாக இந்தியா தெரிவித்திருந்தது. அத்துடன் லடாக் எல்லையில் 4,000 கிலோ மீட்டர் தூரம் வரை இந்தியா பாதுகாப்பை பலப்படுத்த செய்துள்ளது. ஆதலால் ராணுவ வீரர்களை பயிற்சியிலிருந்து தவிர்த்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் நான்காம் தேதி அந்தமான் கடலில் இந்தியா ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
இந்திய கடற்படை ரஷ்ய கப்பற்படையுடன் மூன்று கப்பல்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபடும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவிற்கு ரஷ்யாவுடன் வலுவான உறவுகள் உள்ளன என்பதற்கு சான்றாக இது அமைகிறது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்த நிகழ்வுகளிலிருந்து இந்தியா விலகி இருந்தது. எனவே செப்டம்பர் 4 ஆம் தேதி ரஷ்யாவுடன் ஒரு கடற்படை பயிற்சி நடைபெறும் என்றும் சீன கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்கு வரவேண்டுமானால் அவர்கள் அங்கிருந்து வரவேண்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.