Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேறொரு பெண்ணை மணந்த காதலன்…. பிள்ளையின் கண்முன்னே தீக்குளித்த பெண்… வேடிக்கை பார்த்த மக்கள்..!!

காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதால் பெண் ஒருவர் தனது பிள்ளையின் கண் முன்னே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கே.சி. பட்டியைச் சேர்ந்தவர் தான் மாலதி என்ற பெண்.. 32 வயதுடைய இவருக்கு திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.. கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சதீஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

ஆனால் இவர்களது காதலுக்கு சதீஷின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.  இதனால் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வாழ்ந்துவந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.

இந்தநிலையில், 3 நாள்களுக்கு முன்பாக சதீஷுக்கு அவரது பெற்றோர் கொடைக்கானல் அருகே இருக்கும் பண்ணைக்காட்டில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்துவைத்தனர். இதனால், மிகுந்த மனவேதனையடைந்த மாலதி, தன்னுடைய மகனுடன் காதலன் வீட்டு முன் நின்று கொண்டு நியாயம் கேட்டுப் போராடினார்.

ஆனால், சதீஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால்  மாலதியை அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.. கண்ணீர் விட்டு கதறி அழுதும் எந்த பயனும் இல்லை.. கணவனும் சரியில்லாததால் பிரிந்து விட்டார்.. காதலனும் கைவிட்டு வேறொரு பெண்ணை மணந்து விட்டான்.. ஆண் குழந்தையுடன் நிர்க்கதியாய் நிற்கும் மாலதி, மனமுடைந்து  தனது குழந்தையின் கண் முன்னே, காதலன் வீட்டின் அருகே தீக்குளித்து உயிரை விட்டு விட்டார்..

மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் ஒரு பெண் தீக்குளிக்க முயற்சி செய்கிறார்.. ஆனால் அதனைத் தடுக்க யாருமே முன் வராமல் மனிதாபிமானம் இல்லாமல் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றனர்..

தீவைத்துக்கொண்ட சில நொடிகளிலேயே தன்னை காப்பாற்றுமாறு அலறித் துடிக்கும்போதும், ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார்.. இந்த கொடுமையும் நிகழ்ந்துள்ளது.. தாயை இழந்து தனியாக நிற்கும் சிறுவனுக்கு தாய் இறந்துபோனது கூட தெரியாத நிலை கண்கலங்க வைக்கிறது.

Categories

Tech |