Categories
தேசிய செய்திகள்

வடிவேலு பட பாணியில்… 5 கணவர்களை ஏமாற்றி.. 6வதாக வாலிபரை மணந்த பெண்… அதிர்ச்சி அடைந்த போலீசார்…!!

 ஐந்து கணவர்களை உதறிவிட்டு ஆறாவதாக வாலிபரை கரம்பிடித்த 38 வயது பெண்ணின்  காதலுக்கு எதிப்பு தெரிவித்ததால்  பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

நடிகர் அர்ஜுன் நடித்துள்ள தமிழ் திரைப்படமான மருதமலை எனும் படத்தில் வைகைப்புயல் வடிவேல் நடித்த ஒரு நகைச்சுவை காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் வருவது போலவே நிஜ வாழ்க்கையிலும் ஒரு பெண் ஐந்து கணவர்களை கைவிட்டு ஆறாவதாக ஒரு வாலிபரை தன் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க நினைத்தார். இதனால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக போலீசில் தஞ்சம் அடைந்தார். சிக்கமகளூரு கிராமத்தில் இச்சம்பவம் உண்மையிலேயே நிகழ்ந்துள்ளது. அந்த கிராமத்தில் சந்துரு என்ற வாலிபர் ஒரு பெண்ணுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர்கள் தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், தங்களுடைய காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருப்பதாகவும், உயிருக்கு பயந்து வந்திருப்பதால் தங்களுக்கு  பாதுகாப்பு தருமாறு வேண்டியதாகவும் போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவர்கள்  இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.  சிறிது நேரத்திற்கு பிறகு அந்த காமெடியில் வருவது போலவே 5 பேர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். சந்துரு அழைத்து வந்த பெண்ணை தனது மனைவி என்று அனைவரும் போலீசாரிடம் கூறியுள்ளனர் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணை விசாரிப்பதற்கு அழைத்தனர்.  அப்பெண்ணிடம் விசாரித்த பிறகே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

English Quotes For Facebook And Whatsapp: Fake Love ( Cheating )

அதாவது சிக்கமகளூருவை  சேர்ந்த பசவராஜ், பெங்களூருவை சேர்ந்த கிரண், ரமேஷ், துக்காராம்  மற்றும் அவர்களுடன் ஒரு வாலிபர் இருந்துள்ளார். அவர்கள் 5 பேரையும் அந்த பெண் காதலித்து திருமணம் செய்து சில காலம் குடும்பம் நடத்தி வந்ததாகவும் அதன்பிறகு தலைமறைவாகி விட்டதாகவும் தெரியவந்தது .  மேலும் அவருக்கு இரண்டு பேருடன் குழந்தையும் உள்ளது.தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கேட்ட  போலீசாரிடம், தனது பெயர் பிரியா எனவும் தனக்கு 38 வயது  ஆவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.  மேலும் ரமேஷ், பசவராஜ் உள்பட 5 பேரை ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் சில காலம் குடும்பம் நடத்தி வந்தது மற்றும் அதற்குப் பிறகு தலைமறைவானது இவை அனைத்தும் உண்மை என்றும் ஒப்புக் கொண்டுள்ளார். 

அதுமட்டுமல்லாமல் மேலும் அவர் தற்போது சந்துருவை தான் தீவிரமாக காதலித்து வருவதாகவும், ஆறாவதாக சந்துருவை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் மட்டுமே வாழ விருப்பம் உள்ளது என்றும் அடம்பிடித்துள்ளார்.  போலீசார் சந்த்ருவிற்கு இதுவும் ஒரு வகையான கள்ளக்காதல் என்று புரிய வைத்தனர்.  இருப்பினும் சந்துரு தனக்கு தன் காதலி தான் வேண்டும் எனவும் அவர் ஏற்கனவே ஐந்து திருமணம் செய்திருப்பது குறித்து எனக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சந்துருவிற்கு தாய்,தந்தை இல்லாத காரணத்தால் அவரது அக்காவிடம் விசாரித்தனர். சந்துரு அக்காவிடம் பேசுகையில்கூட சந்துருவின் மனதில் எவ்வித மாற்றமும் கிடைக்கவில்லை. எனவே செய்வதறியாது திகைத்து நின்ற போலீசார் விவாகரத்து ஆகாமல் இன்னொருவரைத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று பிரியா  மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர். சிக்கமகளூரு கிராமத்தில்  பரபரப்பாகவும் நகைச்சுவையாகவும் பிரியாவின் செய்தி மக்களிடையே பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |