தமிழகத்தில் வருகின்ற 3ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புளளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது பரவலாக மிதமான முதல் லேசான மற்றும் கன மழை பெய்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள அறிக்கையில், திருநெல்வேலி, தென்காசி, போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும், வருகின்ற செப் 2 மற்றும் 3ம் தேதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம் மற்றும் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிகக்கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.