சமீர் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்தில் சின்னத்திரை ஹிரோயின் நாயகியாக நடித்துள்ளார்.
சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணிபோஜன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆஹா’ சீரியலில் மூலம் அறிமுகமானார். பின்னர் ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்தார். இந்த சீரியலின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் வாணி தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். சமீர் இயக்கம் இப்படத்தில் தருண் பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இது குறித்து வாணி கூறுகையில் “தனக்கு தெலுங்கு மொழி சரியா தெரியாது என்றாலும் கூட படக்குழுவினர் பலர் தமிழிலேயே பேசுவதால் எனக்கு சிரமமில்லை என்றும், வசனத்தை மனப்பாடம் செய்து ஒத்திகை பார்த்து கொள்வதாகவும், படக்குழுவில் உள்ள சிலர் தனக்கு ஒத்துழைப்பு கொடுப்பதால் என்னால் தெலுங்கு படத்தில் எளிதாக நடிக்க முடிகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.