கல்லூரி இறுதி பருவத் தேர்வு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் 2019-2020 கல்வியாண்டுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கின்றன.ஆனால் இந்த இக்கட்டான சூழலில் மாணவர்கள் வெளியில் வந்து தேர்வுகளை எழுதுவது என்பது சிரமமான ஒன்று என்பதனால் முதல் பருவம் தொடங்கி மூன்றாம் பருவம் வரை உள்ள மாணவர்களுக்கு சமீபத்தில் அரசு ஆல் பாஸ் என்று தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து இறுதிப் பருவத் தேர்வுகள் நடைபெறுமா? என்ற கேள்விக்கு அண்மையில் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில்,தேர்வுகளை எப்பொழுது நடத்தி முடிப்பீர்கள் என்ற கேள்விக்கு ஏற்றவாறு, 30-ம் தேதிக்குள் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் போன்ற பணிகளை 30ம் தேதி வரை செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.