Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பயமாக இருந்தது” ஐந்து மாதங்களுக்குப் பிறகு பயிற்சியில் ஈடுபட்ட ஆர்சிபி அணி கேப்டன்….!!


நீண்ட நாட்களுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆர்சிபி அணியின் கேப்டன் முதல் பந்தை எதிர்கொள்ள சிறிது பயமாக இருந்தது என கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 13வது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இதன் போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளதால் இதற்காக வீரர்கள் அங்கு சென்று பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் வலை பயிற்சியில் ஈடுபட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில் “ஐந்து மாதங்களுக்குப் பிறகு வலைப்பயிற்சியின் போது பேட்டை பிடித்து முதல்முறையாக பந்தை எதிர் நோக்கையில் சிறிது பயமாகத்தான் இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட வலை பயிற்சி சிறப்பாகவே இருந்தது.

ஊரடங்கு சமயத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக உணர்கிறேன். பயிற்சியின்போது சிரமம் ஏதும் அதிகம் ஏற்படாததால் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட முடிந்தது. முறையான உடற்பயிற்சி செய்யாமல் இருந்திருந்தால் உடலை எளிதாக அசைத்து விளையாடுவது கடினமாக இருந்திருக்கும். அதுமட்டுமின்றி சுழல் பந்துவீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர், ஷாபாஷ் நதீம், யூஸ்வேந்தர சாஹல் ஆகியோர் முதல் நாளே நீண்ட நேரம் சிறப்பாக விளையாடினார்கள். அதுமட்டுமின்றி எங்களது பயிற்சி முகாம் சிறப்பாக தொடங்கியுள்ளது” என விராட் கோலி கூறியுள்ளார்.

Categories

Tech |