இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூர் அணியின் முக்கிய வீரரான கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இடம்பெற்றுள்ள பிரபல ஆஸ்திரேலிய வீரரான கேன் ரிச்சர்ட் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது முதல் குழந்தையின் பிறப்பை எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா ஆர்சிபி அணியில் களமிறங்கியுள்ளார்.
இந்த அணியில் ரிச்சர்ட் அவர்களின் திறமை இல்லாததால் அணி ஏமாற்றமடைந்துள்ளது. இருப்பினும் ஐபிஎல் தொடரின்போது ரிச்சர்ட் மற்றும் நைக்கி தம்பதியின் குழந்தை பிறக்க இருப்பதால் இந்த உற்சாகமான நேரத்தில் நாங்கள் அவர்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கின்றோம் என ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹாசன் தெரிவித்துள்ளார்.