45 பந்துகளில் சதம் அடித்து கரீபியன் பிரீமியர் லீக் போட்டியின் விருதினை பிரபல வீரர் தட்டிச் சென்றார்.
வெஸ்ட் இண்டீசில் 6 அணிகளுக்கு இடையிலான 8வது கரீபியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் – கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் போட்டியிட்டது. முதலில் விளையாடிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அவர்களை தொடர்ந்து ஆடிய கயானா அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியில் நிக்கோலஸ் பூரான் என்பவர் தொடர்ச்சியாக 3 சிக்சர்களால் தனது முதல் சதத்தை அடித்தார். 45 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். ஏழாவது ஆட்டத்தில் ஆடிய கயானா அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும். மேலும் இந்த சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.