Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (02-09-2020) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம்

02-09-2020, ஆவணி 17, புதன்கிழமை, பௌர்ணமி திதி பகல் 10.52 வரை பின்பு தேய்பிறை பிரதமை.

 சதயம் நட்சத்திரம் மாலை 06.33 வரை பின்பு பூரட்டாதி.

 சித்தயோகம் மாலை 06.33 வரை பின்பு அமிர்தயோகம்.

 நேத்திரம் – 2.

 ஜீவன் – 1.

 மஹாலயபட்சம் ஆரம்பம்.

 

இராகு காலம் மதியம் 12.00-1.30,

 எம கண்டம் காலை 07.30-09.00,

 குளிகன் பகல் 10.30 – 12.00,

 சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

நாளைய ராசிப்பலன் –  02.09.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எதிர்பார்க்காத அளவில் திடீர் செலவு வரும். குடும்பத்தில் பெரியவர்களிடம் நல்ல பண்பை பெறுவீர்கள். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடையும். உத்யோகத்தில் புதிய கூட்டணி உண்டாகும். விரோதிகள் தொல்லை அகலும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு எந்த விஷயத்தையும் துணிச்சலுடன் செய்வீர்கள் வெற்றி பெறுவீர். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற கூலி கிடைக்கும். தொழிலில் லாபம் பெருகும். வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வரவை விட செலவு அதிகரிக்கும். உத்யோகத்தில் சில நெருக்கடிகளால் கடன் வாங்க நேரலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் நன்மதிப்பை பெறுவீர். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகளில் இருந்து விடிவு கிடைக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க சில தாமதம் ஏற்படக்கூடும். உங்களுடைய ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதனால் உடல்நிலையில் பிரச்சனைகள் வரும். உணவு விஷயங்களில் சிறிது கவனம் தேவை கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானத்துடன் செல்ல வேண்டும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வீட்டுக்கு வந்து சேர வாய்ப்பு. வீட்டில் ஒற்றுமை கூடும். பெண்கள் தன் கடமை ஏற்ப நடந்து கொள்வார்கள். புதியவர் இதில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கொடுக்கும். பொன்னும் பொருளும் வாங்க வாய்ப்பு கைகூடும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் தடங்கல் இருந்தால் அகலும். நண்பர்களின் சந்திப்பால் மனதிற்கு மகிழ்ச்சி கூடும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர்கள். உதயகிரி இதில் வெளிவட்டாரத் தொடர்பு அமையும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாமல் பிரச்சனைகள் வரும். குழந்தைகள் வழியில் மருத்துவச் செலவு ஏற்படும். தொழிலில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். சிரித்து சிந்தித்து செயல்பட வேண்டும். கடவுள் பக்தி அதிகரிக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் கூடும். குழந்தைகளின் படிப்பில் கவனம் தேவை. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் அடையும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினை நீங்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களுடன் ஒற்றுமையாக செயற்பட்டால் லாபம் காண நேரும்.

தனுச

உங்களின் ராசிக்கு புதிய தொழிலை தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் பெருகும். பெரியவர்களின் அன்பு ஆதரவு கிடைக்கும். வராத கடன் கைக்கு வரும்.

மகரம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரும். வீட்டில் நிம்மதி இல்லாமல் போகும். உத்யோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் வரும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவு உண்டாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் நடை பெறலாம். வெளியூர் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் வேலை ஆட்கள் பொறுப்பாக இருப்பார். திருமண நிகழ்ச்சிகளில் அனுகூலம் கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலையில் மந்தம் காண்பீர். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரலாம். வீட்டில் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் இருக்கும் பணிச்சுமையை உடன் இருப்பவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

Categories

Tech |