திருப்பத்தூர் அருகே 1 ½ வயது பெண் குழந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி அருகே பெண் ஒருவர் குளிப்பதற்காக தண்ணீர் நிரம்பிய முழு குடத்தில் வாட்டர் ஹீட்டர் ஆன் செய்து வைத்துவிட்டு அதற்குமேல் யாரும் கை வைத்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாமல், அலட்சியத்துடன் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டிற்குள் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை வாட்டர் ஹீட்டர் மீது கைவைத்து மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, அவசர வேலையாக வீட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அதற்கு மேல் துணி ஏதாவது போட்டு மறைத்து வைத்து யாரும் அதில் கைவைக்கா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை பெற்றோர்கள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.