Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அனுகூலம் ஏற்படும்…! தனலாபம் உண்டாகும்…!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று காரியங்களில் அனுகூலம் ஏற்படும் நாளாக உயிருக்கும்.

அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் அவ்வப்போது இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்காக இன்று வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம் அதேபோல் அலைச்சலை குறைத்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வருமானம் இல்லாத தொழிலில் தேவையில்லாமல் நீங்கள் எந்த விதத்திலும் எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம்.

கூடுமானவரை கொடுக்கல் வாங்கல் விஷயங்களில்கூட கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை ஏதும் எண்ன வேண்டாம். பண விவகாரங்களில் ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். இன்று காதலர்களுக்கு கொஞ்சம் துணிச்சல் கூடும் அதனால் கோபமான பேச்சு இருக்கும், கோபமான பேச்சை மட்டும் தவிர்க்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |