Categories
தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு : “அக்-4 இல் தேர்வு” இன்று முதல் ஹால்டிக்கெட் வெளியீடு…. உடனே டவுன்லோடு பண்ணுங்க….!!

UPSC தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுளார்கள்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட மாணவர்களின் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட யுபிஎஸ்சி தேர்வு வருகின்ற அக்டோபர் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, http :// upsc. Gov. in என்ற இணையதளத்தில் சென்று தேர்வு நாள் வரை தங்களது ஹால் டிக்கெட்டை சரி பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |