சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக இருக்கும்.
பிள்ளைகள் வழியிலும் நல்ல செய்திகள் கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். நீங்கள் நினைத்ததை முடித்துக் காட்டும் நாளாக இருக்கும். அதேபோல் எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். எல்லா காரியங்களும் நல்லபடியாகவே நடந்து முடியும். எதிலும் லாபத்துடன் இருப்பீர்கள். கடன்கள், நோய்கள் தீரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். சில விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்துக் கொள்ளுங்கள். வெளியூர் பயணங்களின்போது கவனம் இருக்கட்டும், உடமைகள் மீதும் கவனம் இருக்கட்டும்.
மற்றவர்களுக்கு காசுகள் ஏதும் கொடுக்கும் போதும் கவனமாக இருங்கள். யாருக்கும் என் சிறு உதவிகள் எதுவும் செய்ய வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். மற்றவருடைய பிரச்சினைகளுக்கும் அறிவுறைகள் ஏதும் கொடுக்க வேண்டாம். இன்று காதலர்கள் கூடுமானவரை பொறுமையாகவே நடந்து கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.