Categories
அரசியல்

வேலை வாய்ப்பை அள்ளி கொடுக்கும் “Phonepe”… எத்தனை பேருக்கு தெரியுமா…??

நாடு முழுவதும் பண பரிவர்த்தனைக்கு பயன்படும் செயலிகள் தற்பொழுது வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது

நாடெங்கும் மக்கள் எளிமையான முறையில் பணபரிவர்த்தனை செய்யும் நோக்கில் மொபைல் போன்களில் உள்ள பல செயலிகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குவது, பணப்பரிமாற்றம், போன்ற செயல்களை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்கின்றனர். இதில் முக்கிய பங்கு வகித்து வருவது போன் பே, கூகுள் பே, பேடிஎம், ஃப்ரீ ரீசார்ஜ் இவை அனைத்தும் மக்கள் மத்தியில் வெகுவாக புழக்கத்தில் இருந்து வருகிறது. மேலும் இந்த நிறுவனங்கள் அதிக வேலை வாய்ப்புகளையும் மக்களுக்கு உருவாக்கி கொடுத்துள்ளது.

அந்த வகையில்,கடைகள் மற்றும் வணிகர்களுடனான தொழில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்து வரும் குழுவில் மேலும் புதிதாக 10,000 பேர்  சேர்க்கப்படவுள்ளனர். இப்பொழுது உள்ள நிலையில் இக்குழுவில் சுமார் 8,000 பேர் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 11 மில்லியன் வணிகர்களுடன் தொழில் புரிந்துவரும் போன் பே நிறுவனம் இந்த எண்ணிக்கையை இன்னும் சில காலங்களில் இரு மடங்கு உயர்த்தி, தொழிலை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கி வருகிறது. மேலும் 12 மாதங்களில் இந்த எண்ணிக்கையை 25 மில்லியனாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |