கல்லூரி மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு இறுதி பருவத்தேர்வு என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வு செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதனை பின்பற்றி செப்டம்பர் 15ம் தேதிக பிற்பாடு தமிழகத்தில் நேரில் வந்து மாணவர்கள் எழுதக் கூடிய வகையில் தேர்வு நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், எந்த தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது ? எத்தனை நாட்கள் நடைபெறும் ? என்பது குறித்து விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ஒரு அறிவிப்பையும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 2019 20 ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இறுதி பருவ தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கு இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.