தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவையிலிருந்த இறுதி பருவ தேர்வை வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்னரே நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இறுதி தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எத்தனை நாட்கள் நடைபெறும் ? என்ற விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்ற ஒரு தகவலையும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கு அமல் இருக்கக்கூடிய காலத்தில் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி பின்பற்றி இந்த தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஆஃப்லைன் முறையில் நேரில் வந்து எழுதக்கூடிய இறுதித் தீர்வாகவே இந்த தேர்வானது அமைந்திருக்கிறது.
இறுதி பருவ தேர்வு என்பது கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்று இருக்கும். ஆனால் அதற்க்கு முன்பாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகம் மூடப்பட்ட காரணத்தினால் நடத்தப்படாமல் இருந்த தேர்வு தற்போது நடைபெறும் என்று தெரிகிறது. தேர்வுக்குரிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விரிவான அறிவிப்பாணையை விரைவில் உயிர்களை துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.