முதலையை பிடிக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏரியிலிருந்து பொம்மை முதலையை மீட்டெடுத்தனர்.
சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் இருக்கும் ஏரியில் முதலை ஒன்று இருப்பதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் சென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற வீரர்கள் முதலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஏரியிலிருந்து வீரர்களுக்கு கிடைத்தது உண்மையான முதலை இல்லை அது வெறும் பிளாஸ்டிக் முதலை பொம்மை.
அதனுடன் புகைப்படம் எடுக்க அது சமூக வலைத்தளத்தில் வைரலானது. அது பொம்மை என்று அறியாத பலர் அந்த முதலையை செல்லப்பிராணியாக வளர்த்தவர்கள் ஏரியில் விட்டுவிட்டதாக வதந்திகளைப் பரப்பினர். இத்தகைய பரபரப்பை ஏற்படுத்திய அந்த முதலை தற்போது குப்பை தொட்டியில் போடப்பட்டது. எனவே இனி மக்கள் ஏரியில் இருந்த முதலை பற்றிய அச்சம் இன்றி நிம்மதியாக இருக்கலாம்.