Categories
சினிமா தமிழ் சினிமா

OTT-யில் மாஸ்டர்….. ரசிகர்கள் செய்த காரியம்….. மதுரை சிட்டிக்குள் பரபரப்பு போஸ்டர்….!!

மாஸ்டர் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகக் கூடாது என்பதற்காக மதுரையில் ரசிகர்கள் செய்த செயல் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், திரையரங்குகள் திறப்பதில் தாமதம் நீடித்து வருகிறது. இதனால் பல திரை பிரபலங்களின் படங்கள் திரைக்கு வராமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளன. இதைத்தொடர்ந்து, OTT தளங்களில் திரைப்படங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. அதன்படி,

திரையரங்குகள் திறக்க தாமதமாவதால் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து  மாஸ்டர்திரைப்படமும் OTT தளத்தில் வெளியாகும் என பல வதந்திகள் பரவி வந்தன. இதை உண்மை என நம்பி பல ரசிகர்கள் போட்டியில் படத்தை வெளியிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இதற்கு ஒருபடி மேலாக சென்ற மதுரை விஜய் ரசிகர்கள், பரபரப்பு போஸ்டர் ஒன்றை அடித்து மதுரை சிட்டி முழுவதும் ஒட்டியுள்ளனர். அதில்,மாஸ்டர் தளபதிக்கு அன்பு வேண்டுகோள் எங்களுக்குத் தேவையில்லை OTT எங்களுக்கு தேவை “ஒன்லி தளபதி திரையில்” என்ற புதிய போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு முன்பாக விஜய் அவர்களின் திருமண நாளை முன்னிட்டு அவரையும், அவரது மனைவியையும் எம்ஜிஆர், ஜெயலலிதா போல அவரது ரசிகர்கள் சித்தரித்து மதுரையில் சில நாட்களுக்கு முன்பு போஸ்டர் ஒட்டியது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |