Categories
லைப் ஸ்டைல்

தூக்கமின்மை பிரச்சனையா….? இதை பாலோ பண்ணுங்க…. நிம்மதியா தூங்கலாம்…..!!

தூக்கமின்மை பிரச்சனையை போக்குவதற்கான சில வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

தூக்கமின்மை பிரச்சனை இன்று பலர் இடையே இருக்கக்கூடிய பொதுவான ஒன்று. தூக்கமின்மையால் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே நிம்மதியான தூக்கம் மட்டுமே மனிதனை வாழ்வில் சந்தோசமாக வைத்திருக்கும்.  இரவில் படுத்தவுடன் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களாக  நீங்கள் இருந்தால், கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுங்கள்,  

முதலில் தூங்கச் செல்லும் முன் அறையை காற்றோட்டம் நிறைந்ததாக  வைத்துக்கொள்ளுங்கள். சிறிது வெப்ப  சலனம் கூட  முழுமையாக தூக்கத்தை  கெடுத்துவிடும். பாய் விரித்து படுத்தாலும், பஞ்சு   தலையணையை  உபயோகிப்பது  நல்லது.

வெறும் தரையில் தலை வைத்து படுப்பது ஒரு கனமான உணர்வை ஏற்படுத்தி எளிதில் தூக்கத்தை வரவழைக்காது.  தூங்குவதற்கு  அரை மணி நேரத்திற்கு முன்பு பசும் பால் குடிப்பது அமைதியை தரும். அதுபோல தூங்கும் போது இடது பக்கமாக தலை வைத்து படுத்தால், நெஞ்சு எரிச்சலை தவிர்க்கலாம். நடு இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் அதோடு தூக்கம் நின்றுவிடும். அதை தவிர்க்க இந்த முறையை பின்பற்றலாம். 

Categories

Tech |