வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு நோய்த்தொற்றிற்கான அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வருவோருக்குநோய்த்தொற்றிற்கான அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தபடுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் மட்டும் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் தொழில் நிறுவனஊழியர்களுக்கும் நாளை முதல் கொரோனா நோய் தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கும் செயலானது நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோருக்கு வீட்டில் தனிமைப்படுத்துவது இனி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சென்னை வருபவர்களுக்கு மட்டும் நோய்க்கான அறிகுறி இருந்தால் மட்டுமே, அவர்களும் தனிமைப் படுத்தப்படுவர் என்றும், அவ்வாறு வருபவர்கள் அவர்கள் வீட்டிலேயே அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.