Categories
தேசிய செய்திகள்

வீழ்ச்சியிலும் எழுச்சி கண்ட விவசாயம்…!!

கொரோனா நெருக்கடி காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் நாட்டின் விவசாயத்துறை 3.4% வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொரோனா தாக்கத்தால் -23.9 சதவீதமாக சரிந்ததுள்ளது. தொழில்துறை -38.1 சதவிகிதமாகவும், உற்பத்தித்துறை -39.3 சதவிகிதமாகவும், கட்டுமானத்துறை -50.3 சதவீதமாகவும், நிலக்கரித்துறை -23 3 சதவீதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளன.

இந்நிலையில் விவசாயத்துறை மட்டும் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு 3 சதவீதமாக இருந்த விவசாயத்துறையின் வளர்ச்சி இந்த ஆண்டு 3.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும், விவசாயத் துறை மட்டும் வளர்ச்சி கண்டிருப்பது நம்பிக்கை தருவதாக உள்ளதென பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |