கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மலேசியா அரசு நேற்று முதல் இந்தியர்கள் எவரும் மலேசியாவுக்குள் நுழைய கூடாது என தடை விதித்துள்ளது. இந்தத் தடையானது இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் குடி மக்களுக்கும் பொருந்தும் என கூறியுள்ளது. மலேசிய அரசின் இத்தகைய முடிவால், நீண்டகால தேர்ச்சி பெற்றவர்கள், மாணவர்கள், வெளிநாட்டவர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிக அளவு பாதிப்படைவார்கள்.
அது மட்டுமன்றி அனைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மார்ச் மாதம் முதல் மலேசியாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி கொண்டிருப்பதால், இந்த ஆண்டு இறுதிவரையில் கொரோனாவை கற்றுக்கொடுத்த மலேசியா அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் முஹைதீன் யாசின் கூறியுள்ளார்.