Categories
உலக செய்திகள்

ஊரடங்கை தளர்த்துவது ஆபத்து… உலக சுகாதார நிறுவனம்…!!!

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் எதுவும் தற்போது வரை கண்டறியப்படவில்லை. அதனால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனாவை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இருந்தாலும் பல மாதங்களாக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கு நடவடிக்கையால் அனைத்து மக்களும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்துள்ளன. அதிலும் சில நாடுகள் ஊரடங்கு மொத்தமாக நீக்கியுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், ஊரடங்கை தளர்த்தியுள்ள நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், ” கொரோனா காலகட்டத்தில் அவசர அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது மக்களின் பேரழிவுக்கு வழிவகுக்கும். ஊரடங்கு தளர்வுகளில் தீவிரம் காட்டும் நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலை தடுப்பதிலும் தீவிரம் காட்ட வேண்டும். அது ஒரு சாத்தியமற்ற சமநிலை கிடையாது.

மேலும் நாடுகள், சமூகங்கள் மற்றும் தனி நபர்கள் அனைவரும் நான்கு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது கொத்துகளாக கொரோனா செழித்து வளர்கின்றது. பாதிப்புக்கு உள்ளாகும் குழுக்களை பாதுகாத்தல் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள தனித்தனியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். அதுமட்டுமன்றி கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல், தனிமைப் படுத்துதல், பரிசோதித்தல் மற்றும் கவனித்தல், அவர்களின் தொடர்புகளை கண்டறிந்து தனிமைப் படுத்துதல் போன்றவற்றை மக்கள் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று நாடுகளின் சுகாதார அமைப்புகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை கண்டறிய குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 105 நாடுகள் பதில் அளித்துள்ளனர்.

அந்த ஆய்வில் 90 சதவிகித நாடுகள், கொரோனாவால் தங்கள் சுகாதார அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர். மேலும் வழக்கமான நோய்த்தடுப்பு மற்றும் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி 90 சதவீத நாடுகள் இடையூறுகள் குறித்து தெரிவித்துள்ளன. ஆய்வில் பங்கேற்ற கால் பங்கு நாடுகள் தங்கள் அவசரகால சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளன. கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தற்போதைய கொரோனா போன்ற சூழலை எதிர் கொள்வதற்கு சிறந்த சுகாதார அமைப்பை வைத்திருக்க வேண்டிய தேவையை வெளிப்படுத்தி இருக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |