நாளைய பஞ்சாங்கம்
03-09-2020, ஆவணி 18, வியாழக்கிழமை, பிரதமை திதி பகல் 12.27 வரை பின்பு தேய்பிறை துதியை.
பூரட்டாதி நட்சத்திரம் இரவு 08.51 வரை பின்பு உத்திரட்டாதி.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
தனிய நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
நாளைய ராசிப்பலன் – 03.09.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு சுபநிகழ்ச்சி நடக்க நேரும். குழந்தைகளோடு இருந்த மனக்கசப்பு நீங்கும். உத்யோக ரீதியில் திட்டங்கள் அனைத்தும் வெற்றி கொடுக்கும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர்கள். தொழில் சம்பந்தமாக வெளித் தொடர்பு உண்டாகும். வெளியில் கொடுத்த கடனை திருப்பி வாங்குவீர்கள்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு எந்த முயற்சி எடுத்தாலும் வெற்றியை தரும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இன் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் இடம் இருந்து நல்ல செய்திகள் வரும். தொழிலில் உடன் இருப்பவர்களிடம் நட்பு அதிகரிக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உறவினர்களால் வீட்டில் இருந்த ஒற்றுமை குறைய நேரும். உத்தியோகத்தில் மந்தம் காண்பீர். மின் செலவைக் குறைப்பதன் ஆல் பிரச்சனைகளை நீக்கலாம். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். உத்யோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு.
கடகம்
உங்களின் ராசிக்கு உடலில் சுறுசுறுப்பில்லாமல் இருக்கும். வீண் அலைச்சல்கள் மூலம் மன உளைச்சல் ஏற்படும். பகல் 2. 15 வரை வெளி பயணங்களை தவிர்க்கவும். எந்த செயல் செய்தாலும் நிதானத்துடன் செயல்படுங்கள்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பகல் 2. 15 வரை மன உளைச்சலை அதிகரிக்கும். எந்த வேலை செய்தாலும் காலதாமதம் உண்டாகும். உத்யோகத்தில் எந்த புது முயற்சிகளையும் எடுக்க வேண்டாம். வீட்டில் உள்ளவர்களிடம் தேவையற்ற பேச்சை குறைக்கவும்.
கன்னி
உங்களின் ராசிக்கு அலுவலகப் பணிகளில் ஆர்வமாக செயல்படுவீர். உத்தியோக ரீதியாக வங்கியில் எதிர்பார்த்த கடன் அமைய வாய்ப்பு உண்டு. வெளி தொடர்பு நட்பு கிடைக்கும். அரசு வழியாக அனுகூலம் பெருகும். கடன் பிரச்சினைகள் அகலும். சுப காரியங்கள் கை கூட நேரம்.
துலாம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக உள்ளதால் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி பெருகும். விடாமுயற்சியால் எதிர்பார்த்த லாபத்தை உத்யோகத்தில் பெறுவீர். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் பெருகும். தொழிலில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்க விரும்புவீர்கள். கடவுள் நம்பிக்கை இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
தனுசு
உங்களின் ராசிக்கு நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். பெரியவர்களின் அன்பே பெருவீர். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். உத்யகத்தில் லாபம் காண்பீர். புதிய சொத்துக்களை வாங்க ஆர்வம் கொள்வீர்கள். சேமித்து வைக்கும் அளவுக்கு லாபம் பெருகும்.
மகரம்
உங்கள் இராசிக்கு கொடுத்த கடனை திரும்பி வாங்க சில தாமதமாகும். வீடு வாகனம் வாங்குவதற்கு சிறு தொகை செலவிட நேரும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் வீண் அலைச்சல் உண்டாகும். உத்தியோக ரீதியில் வெளி பயணங்கள் கைகொடுக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு உத்தியோகம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர். வெளியூர் பயணங்கள் வெற்றியை தரும். உடல்நலம் சீராக இருக்கும். தொழிலில் புதிய நபர் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு. சுபகாரிய நிகழ்ச்சிகள் நல்ல பலன் கொடுக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மன உளைச்சல்கள் உண்டாக நேரிடும். தேவையற்ற பயணங்களால் மன உளைச்சல் கூடும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் பண பிரச்சனையை தவிர்க்கலாம். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.