Categories
உலக செய்திகள்

சமையல் எரிவாயுவாக மாறும் பீர்…. “புத்தம் புதிய திட்டம்” மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

ஆஸ்திரேலியாவில் பீர் வீணாகி விடக்கூடாது என்பதற்காக அதனை சமையல் எரிவாயுவாக  மாற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

பீர் பானம் தயாரிப்பில் பிரபலமான நாடு ஆஸ்திரேலியா. நன்கு சுவையான தரமான பீர்கள் அங்கேதான் தயாரிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பீர் விற்பனை முற்றிலும் நின்று போனது. இதனால் ஏகப்பட்ட டன் கணக்கில் பீர் பாட்டில்கள் விற்கப்படாமல் குவிந்து கிடந்தன.

இந்நிலையில் பீரை வீணாக்காமல் வீடுகளுக்குத் தேவையான சமையல் எரிவாயுவாக  மாற்றும் திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி, வழக்கத்தை விட 200 வீடுகளுக்கு தேவையான எரிவாயு உற்பத்தியை  இந்த முறை  வழங்குவதாகவும், இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இந்த ஆல்கஹாலை, இந்தியாவிலும் இதே போன்று சமையல் எரிவாயுவாக மாற்றினால், இந்திய இல்லத்தரசிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்களே!  என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Categories

Tech |