Categories
மாநில செய்திகள்

“அரியர்” மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உயர்கல்வித்துறை

அரியர் உள்ள மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் அளிக்கலாம் என்று உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

ஊரடங்கு காரணத்தால் மாணவர்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று தேர்வுகளை எழுத முடியாது என்ற நிலை இருந்ததால் அரசு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவித்து உத்தரவிட்டது. ஆனால் இறுதி பருவ தேர்வு எழுதுபவர்கள் மட்டும் கட்டாயம் எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தற்பொழுது அரியர்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்ததுடன், முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்கள் மற்றும் உள்மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் சுமார் 5 லட்சத்துக்கும் மேலான அரியர் மாணவர்களில், பெரும்பாலானவர்கள் முந்தைய தேர்வுகளிலும் தோல்வி பெற்றுள்ளதால், அவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது என்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அரசிடம் தங்களின் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் அடுத்து நடைபெறும் செமஸ்டரை எழுதலாம் என்று அறிவிக்கவும் உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அவ்வாறு இல்லை என்றால் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் முந்தைய தேர்வு முடிவுகளுக்கு பதிலாக, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கவும் உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Categories

Tech |