கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக்கொள்ளும் குணம் கொண்ட உங்களின் ராசிக்கு தேவையற்ற அளைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.
முடிந்தவரை கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்ற சிறுசிறு பாதிப்புகளை உண்டாக்கி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பொருளாதார நிலை இன்று ஓரளவு சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய ஆற்றல் மதிப்பு மரியாதையை உண்டாக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: கரும்பச்சை நிறம்.