மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது.
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். மாணவ மாணவியர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்துக் கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த பலன்களை பெற முடியும். தேவையற்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. உங்களின் ராசிக்கு முருகன் வழிபாடு மற்றும் சிவ வழிபாடு தொடர்ந்து செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.