இந்தியாவில் pubg க்கு விதிக்கப்பட்ட தடை வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 20 லட்சம் பேர் விளையாடும் ஆன்லைன் கேமான pubg யால் சிறுவர்கள், இளைஞர்கள் என பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், pubg உட்பட 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தற்போது தொடர்ந்து தங்களது கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
பாமக நிறுவனர் ராமதாஸ் இந்தியாவில் pubg உட்பட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. கல்வியை சிதைத்து வன்முறையை வளர்க்கும் இந்த செயலி தடை செய்யப்பட்டிருப்பது மூலம் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து மீட்கப்படுவார்கள். இனி இதற்க்கு அடுத்த படியாக அந்த விளையாட்டுக்கு அடிமையாக இருந்த சிறுவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.