Categories
உலக செய்திகள்

பார்ட்டியால் வந்த வினை….. பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா….. சோகத்தில் ரசிகர்கள்….!!

பிரபல பிரேசில் கால்பந்து வீரருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய இளைஞர்களுக்கு ஒரு கண் கிரிக்கெட் விளையாட்டு என்றால், மற்றொரு கண் கால்பந்து  விளையாட்டுதான். உலக அளவில் மிகப் பெரிய கால்பந்து போட்டிகளில் விளையாடக் கூடிய மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்டோருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இந்தியாவில் உள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இவர்களது ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு  விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு இருக்கையில், வார இறுதியில் போட்டியை முடித்துவிட்டு பார்ட்டிக்கு சென்று திரும்பிய பிரேசிலின் பிரபல கால்பந்து வீரர் நெய்மர்க்கு  கொரோனா உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்பந்து அணியில் உள்ள மேலும் இரண்டு வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெய்மர்க்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்ட செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |