கர்ப்பிணிப் பெண்ணொருவர் பேருந்தை பிடிக்க முயற்சிக்கையில் புடவை சிக்கியதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த திவ்யா என்ற பெண் ஆஸ்டர் மீம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். தினமும் மருத்துவமனைக்கு காலையிலேயே செல்வதை வழக்கமாக கொண்டவர் திவ்யா. எப்போதும் போல் நேற்று மருத்துவமனைக்கு செல்ல காலை 7 மணி அளவில் தயாரான திவ்யா வழக்கமாக செல்லும் பேருந்து வந்தவுடன் பேருந்தில் ஏற முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது புடவை சிக்கி பேருந்திலிருந்து கீழே விழுந்து விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து விசாரணை மேற்கொண்டபோது அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பதும் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.