தாயுடன் சேர்ந்து கணவனை மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரமேஷ்பாபு-ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி ரமேஷ்பாபு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் ரமேஷ் பாபுவை பல இடங்களில் தேடி அலைந்தனர். இந்நிலையில் 28 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் ரமேஷ்பாபு உடல் முழுவதும் காயங்களுடன் ஏரி கால்வாய் பகுதியில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.
விசாரணையில் ரமேஷ் பாபுவின் மனைவியான ஜெயந்தி மற்றும் அவரது தாய் சரசா ஆகிய இருவரும் உறவினர்கள் மற்றும் கூலி படையினரின் உதவியோடு ரமேஷ்பாபுவை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில் ரமேஷ்பாபு தினமும் மது அருந்திவிட்டு ஜெயந்தியை அடித்ததாகவும் இதனை ஜெயந்தி தாய் சரசாவிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் காரணமாகவே உறவினர்கள் மற்றும் கூலிப்படையினர் உதவியுடன் ரமேஷ் பாபுவை கொலை செய்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலையில் வைத்து கார் மூலம் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரமேஷ்பாபு மீது மோதி கொலை செய்ய முயற்சி செய்தபோது சிறிய காயங்களுடன் அவர் பிழைத்துள்ளார். அதனை தொடர்ந்து 27 ஆம் தேதி ஆலங்குப்பம் அருகே உள்ள விவசாய நிலத்தில் வைத்து தனுஷ், விக்கி, கௌதமன், ராமன் ஆகியோர் இணைந்து ரமேஷ்பாபுவை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சரசா, ஜெயந்தி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த தனுஷ், கௌதமன், ராமன், விக்கி ஆகிய ஆறு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.