தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்துள்ள பரமேஸ்வர மங்கலம் பகுதியில் 7 வயது சிறுமி தன்னுடைய வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞன் அன்பாக பேசி சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளான்..
இதனால் சிறுமி சத்தம் போட்டு அலற, சூர்யா சிறுமியை விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.. இதனையடுத்து தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், அணைக் கட்டு போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.