Categories
கால் பந்து விளையாட்டு

கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா… பரிசோதனையில் உறுதி… கவலையில் பி.எஸ்.ஜி..!!

பி எஸ் ஜி அணியில் விளையாடி வரும் பிரேசில் நாட்டின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரரான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் முன்னணி கிளப்பான பி எஸ் ஜி  நிறுவனம் தங்களின் கால்பந்தாட்ட வீரர்களுக்கு விதிமுறைகளுக்கு ஏற்ப கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டது. இதில் அவ்வணியை சேர்ந்த ஏஞ்சல் டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் அதோடு முன்னணி வீரரான நெய்மர் ஆகியோர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

இவ்வருடம் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் பி எஸ் ஜி அணி இறுதிப்போட்டி வரை சென்று சமீபத்தில் நடந்த இறுதிப்போட்டியில் 1.0 என்ற அளவில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு லீக் போட்டியின் புதிய சீசன் தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில் வருகின்ற பத்தாம் தேதி முதல் பி எஸ் ஜி அணி பொடியை எதிர்நோக்குகின்றது. ஆனால் கொரோனா தொற்று உறுதிப் படுத்தப் பட்டிருக்கும் மூன்று வீரர்களும் இந்த போட்டியில் விளையாடுவார்கள் என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |