இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் வருகின்ற 18ம் தேதி அமெரிக்க வெள்ளை மாளிகையில் கையெழுத்தாக உள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே முழு அளவிலான உறவை மேற்கொள்ளும் வகையிலான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று அமெரிக்காவின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 13ஆம் தேதி கையெழுத்தாகியது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன் மூலமாக இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், மூன்றாவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் மூலம் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே இருக்கும் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்ப்பை விட அதிக அளவு முன்னேறியுள்ளன. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் வருகின்ற 18ம் தேதி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கையெழுத்தாக உள்ளது.
மேலும் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவை இயல்பாக அது பற்றி அமெரிக்காவுடன் இணைந்து நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமன்றி தூதரக அலுவலகங்களை அமைப்பது, தூதரக அதிகாரிகளை நியமிப்பது மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இடம் பெற உள்ளன.