Categories
உலக செய்திகள்

‘என்னை கொல்ல போறாங்க’…அமெரிக்கா அதிபரின் திட்டம்…வெனிசுலா அதிபர் குற்றசாட்டு…!!!

அமெரிக்க அதிபர் தன்னை கொல்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என வெனிசுலா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளமிக்க நாடாக திகழ்கிறது. தற்போது பங்கு பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்கள் நிலவிக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியில் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் பெற்றுள்ளன. தனது நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்கு அமெரிக்காவே முழு காரணம் என்றும், வெனிசுலாவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சி செய்வதாகவும் அந்நாட்டு அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னை கொலை உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெனிசுலா அதிபர் குற்றம் சாட்டியுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெனிசூலா அதிபர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ” நான் மிகவும் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்கு பலியாகினேன். அமெரிக்க அரசே என் தலைக்கு 15 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது. என்னை கொலை செய்ய அமெரிக்க அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவர்கள் என்னை கொல்வதற்கு வெனிசுலாவில் துப்பாக்கி சுடும் வீரர்களை நியமிக்க முயற்சி செய்து வருகிறார்கள். என்னை கொல்லும் கூலிப்படையை டிரம்ப் தேடிக் கொண்டிருக்கிறார்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக வெனிசுலா அதிபர் உட்பட்ட அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் 14 பேரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அறிவித்த அமெரிக்கா அவர்களை கைது செய்ய உதவி செய்பவர்களுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |