இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி(83) மிகப்பெரிய வர்த்தகர். கோடீஸ்வரரான இவர் அரசியலில் புகுந்து பெரும் வெற்றி கண்டார். அதன் மூலம் கடந்த 1994ஆம் ஆண்டு இத்தாலியின் பிரதமரானார். அதன்பிறகு நாலு முறை அந்நாட்டின் பிரதமராக தொடர்ந்து பணியாற்றினார். அவர் தற்போது தேசிய அளவிலான தனது பங்கை குறைத்துக்கொண்டே உள்ளூர் அரசியலில் தனது கட்சியினருக்கு ஆதரவளித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட அவர், தற்போது தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். அவர் பெர்லஸ் சர்டினியா தீவுகளுக்கு சில நாட்களுக்கு முன் சுற்றுலா பயணம் சென்றிருந்ததாகவும், அங்குதான் அவருக்கு ஒருவனா பரவியிருக்கலாம் என்றும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் உதவியாளர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியின் முன்னாள் பிரதமர் விரைவில் குணமடைய வேண்டி பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.